உலகமானது மக்களின் தொகையினாலும் அவர்களினுடைய செயற்பாடுகளின் காரணமாகவும் இயங்குகின்றது. மக்கள் தொகை இல்லையெனில் இன்று உலகம் இல்லை என்றே தான் கூறலாம்.அதாவது ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் குறிப்பிட்டதொரு காலப்பகுதியில் மக்கள் தொகை திரண்டு இருக்கும் தன்மையை சனத்தொகை என அழைத்துக்கொள்ளுவார்கள். இன்றைய உலகின் சனத்தொகையினை அவதானிக்கும்போது 2021ம் ஆண்டு தரவின்படி 7.87 பில்லியன் ஆகும். இதுதவிர 1975ம் ஆண்டு 4.079 பில்லியன் சனத்தொகையும், 1995ம் ஆண்டு 5.744 பில்லியன் சனத்தொகையும், 2005ம் ஆண்டு 6.541 பில்லியன் சனத்தொகையும்,2010ம் ஆண்டு 6.956 பில்லியன் சனத்தொகையும், 2015ம் ஆண்டு 7.379 பில்லியன் சனத்தொகையும், 2019ம் ஆண்டு 7.713 பில்லியன் சனத்தொகையும், 2020ம் ஆண்டு 7.79 பில்லியன் சனத்தொகையாகவும் காணப்பட்டது.
உலக ரீதியான இந்த சனத்தொகையின் எதிர்கால கணிப்பினை அவதானிக்குமிடத்து 2020ம் ஆண்டு 7.794 பில்லியன் ஆகவும்,2025ம் ஆண்டு 8.184 பில்லியன் ஆகவும், 2030ம் ஆண்டு 8.548 பில்லியன் சனத்தொகையும், 2035ம் ஆண்டு 8.887 பில்லியன் சனத்தொகையும், 2040ம் ஆண்டு 9.198 பில்லியன் சனத்தொகையும், 2045ம் ஆண்டு 9.481 பில்லியன் சனத்தொகையும், 2050ம் ஆண்டு 9.735 பில்லியன் ஆகவும் சனத்தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சனத்தொகையினை கண்ட ரீதியாக அவதானிக்கும்போது ஆசியா கண்டத்தில் 4.64 பில்லியன் சனத்தொகையும், ஆபிரிக்கா கண்டத்தில் 1.34 பில்லியன் சனத்தொகையும், ஐரோப்பாவில் 747 மில்லியன் சனத்தொகையும், தென் அமெரிக்காவில் 653 மில்லியன் சனத்தொகையும், வட அமெரிக்காவில் 368.8 மில்லியன் சனத்தொகையும் , ஓசானியாவில் 42 மில்லியன் சனத்தொகையும் காணப்படுகின்றது.
உலக சனத்தொகையின் வளர்ச்சி போக்கினை அவதானிக்கும்போது 1991ம் ஆண்டு 1.63% ஆகவும், 1994ம் ஆண்டு 1.46% ஆகவும், 1999ம் ஆண்டு 1.33% ஆகவும், 2004ம் ஆண்டு 1.25% ஆகவும், 2010ம் ஆண்டு 1.22% ஆகவும், 2015ம் ஆண்டு 1.16% ஆகவும், 2019ம் ஆண்டு 1.10% ஆகவும், 2020ம் ஆண்டு 1.05% ஆகவும் காணப்படுகின்றது.
உலகினுடைய சனத்தொகை அளவுகளினை அடிப்படையாக கொண்டு 3 வகையாக பாகுபடுத்தப்படுகின்றது. அவையாவன அதிகூடிய சனத்தொகை பகுதிகள்(தென்னாசியா, கிழக்காசியா, தென்கிழக்காசியா, மேற்கு ஐரோப்பா), நடுத்தர அளவு கொண்ட பகுதிகள்(வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியாவின் மேற்கு கரை, ஐரோப்பாவின் வடக்கு கரை, கிழக்கு ஆபிரிக்கா, தென் கிழக்கு ஆபிரிக்கா), குறைந்த சனத்தொகை கொண்ட பகுதிகள்(ஒரிஸா, சகாரா, அட்டகாமா, பற்றகோனியா, கோபி, கிரீன்லாந்து, வட துருவம், தென் துருவம்) போன்றனவாகும்.


No comments:
Post a Comment